Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

‘பைரவா’ படத்தின் நீளம் குறித்து படக்குழு புதிய தகவல்

In
Updated: 11:58 GMT, Jan 11, 2017 | Published: 11:58 GMT, Jan 11, 2017 |
0 Comments
1164
bairavaa

பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் ‘பைரவா’ படம் நாளை (வியாழக்கிழமை) திரையரங்குளில் வெளியாகிறது.

‘அழகிய தமிழ்மகன்’ படத்தின் பின்னர் இயக்குநர் பரதனுடன் விஜய் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதோடு, முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நாளை வெளியாக உள்ள ‘பைரவா’ படத்தின் மொத்த நீளம் 2 மணி 44(168 நிமிடங்கள்) நிமிடங்கள் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதில் முதல் பாகம் 1 மணி 21 நிமிடங்களும், இரண்டாம் பாகம் 1 மணி 27 நிமிடங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக படத்தின் நீளம் அதிகமாக இருந்ததாக படக்குழு அதனை சுருக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
‘பைரவா’ உலகம் முழுவதும் 55 நாடுகளில் ரிலீசாகிற நிலையில், தமிழகத்தில் அதிகளவிலான சுமார் 450 திரையரங்குகளில் ‘பைரவா’ வெளியாக உள்ளது.

இதன்மூலம் முதல்நாள் வசூலில் ‘கபாலி’, ‘வேதாளம்’, ‘தெறி’ படங்களின் வசூலை ‘பைரவா’ முந்த வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.