Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேரும் விஷால் – நயன்தாரா

In
Updated: 12:12 GMT, Jan 11, 2017 | Published: 12:12 GMT, Jan 11, 2017 |
0 Comments
1134
vishal-nayanthara

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர நடிகை நயன்தாரா.

இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதைகளில் அதிகமாக நடித்து வரும் நயன்தாரா தற்போது, ‘அறம்’, ‘டோரா’, ‘கொலையுதிர் காலம்’, ‘நேர் வழி’, ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் 2 பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, தற்போது விஷாலுடன் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இணையும் படத்தை ‘பிரம்மன்’ படத்தை இயக்கிய சாக்ரடீஸ் இயக்கவுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2008-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சத்யம்’ என்ற படத்தில் விஷாலும், நயன்தாராவும் இணைந்து நடித்திருந்தனர்.

இந்நிலையில், 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஷால் படத்தில் நயன்தாரா நடிப்பதாக வெளிவந்துள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)