Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரேமம் இயக்குனருடன் இணையும் சிம்பு – மம்முட்டி

In சினிமா
Updated: 16:29 GMT, Jan 11, 2017 | Published: 12:39 GMT, Jan 11, 2017 |
0 Comments
1196
icon_com
This post was written by : Shailu
simbu

மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி மற்றும் அனுபமா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் படம் ‘பிரேமம்’.

இதனையடுத்து,இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தமிழில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகருடன் இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில்,  தற்போது அந்த படத்தில் தமிழ் நடிகருடன் முக்கிய கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சிம்புவிடம் கதை கூறிய அல்போன்ஸ், விரைவில் சிம்புவை வைத்து இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

எனவே சிம்பு-அல்போன்ஸ்- மம்முட்டி கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg