Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வாக ‘நெடுந்தாரகை’

In இலங்கை
Updated: 15:31 GMT, Jan 11, 2017 | Published: 15:31 GMT, Jan 11, 2017 |
0 Comments
1431
This post was written by : srikkanth

நெடுந்தீவு மக்களினதும் சுற்றுலா பயணிகளினதும் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் நெடுந்தாரகை எனும் படகு நேற்று(திங்கட்கிழமை) நெடுந்தீவை வந்தடைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலுள்ள படகு கட்டும் நிறுவனமான டொகியாட்டினால் நிர்மாணிக்கப்பட்ட இப்படகானது வருகிற 20 ஆம் திகதி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் சம்பிரதாயபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்விற்கு, உலக வங்கியின் அதிகாரிகளும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வளவு காலமாக குறிக்கட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் சேவையில் ஈடுப்பட்டு வந்த குமுதினி, அடிக்கடி பழுதடைவதால் போக்குவரத்தும் தடைப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் நெடுந்தாரகை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg