Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பல மில்லியன் மக்களை வறுமை படுகுழியில் தள்ளிய யேமன் மோதல்: ஆண்ட்ரூ மிட்செல்

In
Published: 05:15 GMT, Jan 12, 2017 |
0 Comments
1166
icon_com
This post was written by : Risha

யேமனில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்றுவரும் உள்நாட்டு மோதல்களினால் நாட்டின் பொருளாதாரம் முடக்கப்பட்டு, பல மில்லியன் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ மிட்செல் தெரிவித்தார்.

யேமனின் வட பகுதியில் அமைந்துள்ள சாதா நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு வைத்தியசாலைகளை பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “நான் சாதா நகரின் மத்திய பகுதியில் நின்றுக் கொண்டிருக்கிறேன். இங்கு நாலாப் புறங்களிலும் பேரழிவுகளை மாத்திரமே காணக்கூடியதாக உள்ளது.

இந்த அழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்நகர் மக்களே. இந்த கொடுமைகளை பார்க்க மிகவும் கடினமாக உள்ளது. இந்த மோதல்களின் விளைவாக மில்லியன் கணக்கான மக்கள் வறுமை எனும் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.

இதேவேளை, யேமனில் ஊட்டசத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டோர் குறித்த புள்ளிவிபரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக யேமனுக்கான ஐ.நா. பிரதிநிதியொருவர் ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 1.7 மில்லியன் பேர் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அவர்களுள் 4 இலட்சத்து 62 ஆயிரம் பேரது நிலை மிகவும் பாரதூரமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், 7 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்கி வருவதுடன், 14 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகளின் தேவைகளை எதிர்நோக்கி இருப்பதாகவும் ஐ.நா. பிரதிநிதி மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg