Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டிரம்ப் நிறுவனத்தின் ஆட்சி அதிகாரம் குறித்து சர்ச்சை

In
Updated: 09:00 GMT, Jan 12, 2017 | Published: 06:06 GMT, Jan 12, 2017 |
0 Comments
1166
icon_com
This post was written by : Elakkiya
_93534642_d12d311b-15bb-47e7-b043-5458b897df11

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்ப் உலகளவிலான அவரது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தினை தனது புதல்வர்களிடம்  ஒப்படைக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க அரச நெறிமுறைகள் அலுவலகத்தின் இயக்குனர் தீவிரமாக விமர்சித்துள்ளார்.

கடந்த நாற்பது ஆண்டுகால அமெரிக்க ஜனாதிபதிகளின் மதிப்பீடுகளுடன் டொனால்ட் டிரம்பின் இந்த திட்டம் பொருந்தவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியதன் பின்னர் நேற்று(புதன்கிழமை) முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப் தனது வர்த்தக நிறுவனத்தினை  புதல்வர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அதில் ஏற்படும் சிக்கல்களை அவர்களே தீர்ப்பார்கள்  என்றும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறிருக்க, டொனால்ட் டிரம்பின் அரசில் புதிய நம்பிக்கைகள், புதிய ஒப்பந்தகங்கள் அனைத்தையும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் எதிர்கொள்ள நேரிடும் என்றும் டிரம்பின் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டிரம்பின் இந்த புதிய திட்டம் தனிநலன் குறித்த மோதல்களை நீக்க முடியாது என்று அமெரிக்க அரச நெறிமுறைகள் அலுவலகத்தின் இயக்குனர் வோல்டர் தெரிவித்துள்ளார்.

மேலும், நவீன காலத்தில் ஒவ்வொரு ஜனாதிபதியிடமும் சொத்துவிற்பனை என்பது வலுவான ஒன்றாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள வோல்டர், அதன் பிரகாரம் டொனால்ட் டிரம்ப்பும் தன்னுடைய நிறுவன சொத்துக்களை விற்க வேண்டும் என்பதுடன் கொடையாளர்களால் நடத்தப்படும் அறக்கட்டளைகளுக்கு நிறுவனத்தின் இலாபங்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நூற்றுக்கணக்கான வணிக வர்த்தகங்களுக்க டிரம்ப் நிறுவனம் ஒரு குடையாக செயற்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg