Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பிரித்தானிய அரச தம்பதியினர் தொண்டு நிறுவனங்களுக்கு விஜயம்

In
Published: 06:05 GMT, Jan 12, 2017 |
0 Comments
1111
This post was written by : Risha

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை கொண்ட ஆளுமை கோளாறுடைய பெற்றோருக்கு விசேட சேவைகளை வழங்கும் நிலையம் மற்றும் மரணத் தருவாயை எதிர்நோக்கியிருக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களை ஆதரிக்கும் நிலையம் ஆகியவற்றிற்கு பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மில்டன் ஆகியோர் விஜயம் செய்திருந்தனர்.

முதலில் ஆளுமை கோளாறுகளை கொண்ட பெற்றோருக்கு விசேட சேவைகளை வழங்கும் நிலையத்திற்கு விஜயம் செய்த இளவரசி, அங்கு சிகிச்சைகளை நிறைவு செய்த பெற்றோருடன் கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து இளவரசருடன், கிழக்கு லண்டனிலுள்ள மரணத் தருவாயை எதிர்நோக்கியிருக்கும் குழந்தைகளை ஆதரிக்கும் நிலையத்திற்கு விஜயம் செய்தார்.

அங்கு, அரச தம்பதியர் குறித்த தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் குறித்த நிலையத்துடன் இணைந்துள்ள குடும்பத்தினர் ஆகியோருடன் கலந்துரையாடினர்.

குறித்த நிலையம் நிறுவப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகியுள்ள நிலையில், அதனை முன்னிட்டு அங்கு குழந்தைகளுடன் கேக் வெட்டி வருட பூர்த்தியையும் அரச தம்பதியர் கொண்டாடியிருந்தனர்.