Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இறுதி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மிச்சேல் ஒபாமா

In
Updated: 11:29 GMT, Jan 12, 2017 | Published: 07:28 GMT, Jan 12, 2017 |
0 Comments
1192

அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற வகையில் தனது இறுதி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மிச்சேல் ஒபாமா, தனது கணவரான பராக் ஒபாமாவை புகழ்ந்து பேசியுள்ளார்.

நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜிம்மி ஃபலோன் மற்றும் மிச்சேல் ஒபாமாவுக்கு இடையிலான சம்பாசனைகள் கசப்பான இனிமையான தருணமாக இருந்தது.

இதன்போது, வெள்ளை மாளிகையில் மிச்சேல் ஒபாமாவை முதன்முறையாக சந்தித்தது மற்றும் முதல் நிகழ்ச்சி உள்ளிட்ட பல நினைவுகளை ஜிம்மி ஃபலோன் ஞாபகத்தில் கொண்டுவந்தார்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியாக பதவிக்காலம் நிறைவடைந்து வெளிச்செல்லும் தன்னுடைய கணவர் பராக் ஒபாமாவுக்கு; மிச்சேல் ஒபாமா கடிதம் ஒன்று எழுதினார். அந்த கடிதத்தில், ‘ நன்றிகள் பராக். நீங்கள் நொண்டி வாத்தில்லை என்பதை நிருபித்துவிட்டீர்கள். ஆனால் எனக்கு உரித்துடைய மிகப்பெறுமதி வாய்ந்த வெள்ளி நரி நீங்கள்.’ என்று செல்லமாக குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களில் முதல்பெண்மணி மில்சேல் ஒபாமாவின் இறுதி கலந்துரையாடல் நிகழ்ச்சி இதுவாகவே இருக்கும் என்று கருதப்படுகின்றது.