Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து முழுமையான ஆய்வு வேண்டும்: ரெக்ஸ் டில்லெர்சன்

In
Published: 09:06 GMT, Jan 12, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Elakkiya

ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அரச செயலராக நியமிக்கப்படவுள்ள ரெக்ஸ் டில்லெர்சன் செனட் உறுதிப்படுத்தல் குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

மேலும், ரஷ்யாவுக்கு எதிரான அமரிக்காவின் தற்போதைய பொருளாதார தடைகள் தொடர வேண்டும் என தெரிவித்த அவர் மொஸ்கோவின் வளர்ந்துவரும் ஆக்கிரமிப்பு குறித்து நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள எண்ணெய் நிறுவனம் ஒன்றின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டிலெர்சன், ரஷ்யாவுடனேயே விரிவான வர்த்தக தொடர்புகளை பேணிவந்தார்.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போர் குற்றவாளி என்பதை ஏற்க மறுக்கும் அவர் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே சாத்தியமான மாற்றங்களுக்கு வழிவகுப்பதாக கூறப்படுகின்றது.

இது குறித்து அவர் டில்லெர்சன் தெரிவிக்கையில், ‘ நடைமுறையிலுள்ள அரசியல் சமூக பிரச்சனைகள் குறித்து செயலாற்றவுள்ளேன். இது இருதரப்பு தகவல்கள் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg