Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

மழையால் இடைநிறுத்தப்பட்டது பங்களாதேஷின் துடுப்பாட்டம்

In கிாிக்கட்
Updated: 09:27 GMT, Jan 12, 2017 | Published: 09:27 GMT, Jan 12, 2017 |
0 Comments
1069
This post was written by : Sambavi
New-Zealand-vs-Bangladesh

நியூசிலாந்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் வீரர்கள் தமிம் இக்பால் மற்றும் மொமினுல் ஆகியோர் சிறப்பாக விளையாடிய போதும், மழை குறுக்கிட்டதால் அவர்களின் முயற்சிகளுக்கு போதிய பயன் கிட்டவில்லை.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரையும், ருவென்டி ருவென்டி தொடரையும் நியூசிலாந்து 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் டெஸ்ட் வெலிங்டனில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து களத்தடுப்பினை தேர்வு செய்ய, பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர் இம்ருல் கயஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான தமிம் இக்பால் மற்றும் மொமினுல் ஹக் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

இவ்வாறு ஓட்ட எண்ணிக்கையை பங்களாதேஷ் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்த்திய போது மழை குறுக்கிட்டது. போட்டியின் போது விட்டுவிட்டு மழை பெய்ததால் பல ஓவர்கள் பாதிக்கப்பட்டன.

இறுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் 40.2 ஓவர்களில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது பங்களாதேஷ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 64 ஓட்டங்களுடனும் சாகிப்-அல்-அசன் 5 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.