Chrome Badge

ஜேர்மனிக்கான புலம்பெயர்ந்தோரின் வருகையில் வீழ்ச்சி

In
Updated: 11:31 GMT, Jan 12, 2017 | Published: 09:02 GMT, Jan 12, 2017 |
0 Comments
1199

ஜேர்மனிக்கான புலம்பெயர்ந்தோரின் வருகை கடந்த ஆண்டில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளுக்கான ஜேர்மனியின் கூட்டாட்சி அலுவலகத்தின் தலைவருடன் கூட்டாக நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்திருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘2016ஆம் ஆண்டு 2 இலட்சத்து 80 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 2015ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைவிட மூன்றில் இரண்டு பங்கைவிட குறைவாகும்.

சட்டவிரோதமாக கிரீஸ் தீவுகளுக்கு வரும் அகதிகள் துருக்கிக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அவர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் துருக்கிக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட அகதிகள் ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டமை மற்றும் பால்கன் எல்லை பாதை மூடப்பட்டமை ஆகியனவே இதற்கு காரணம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)