Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பிலிப்பைன்ஸ் விஜயம்

In
Published: 09:28 GMT, Jan 13, 2017 |
0 Comments
1261
icon_com
This post was written by : Elakkiya

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (வியாழக்கிழமை) பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார்.

இந்த விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோவை சந்தித்த அபே, அதனைத் தொடர்ந்து மணிலா மற்றும் தவோ நகரில் வர்த்தகக் குழுக்களை சந்திக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ரொட்றிகோவுடனான சந்திப்பினை தொடர்ந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அபே, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதே பிரதான நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது தீவிரவாத்திற்கு எதிரான ஒத்துழைப்பு, போதை மறுவாழ்வுத் திட்டங்கள், உட்கட்டமைப்பு வளர்ச்சி, மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புக்களில் இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலும் கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

ஷின்சோ அபே பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொள்வது இத்துடன் மூன்றாவது முறையாகும். முதன்முறையான கடந்த 2013 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் சென்றிருந்த ஷின்சோ அபே 2015 ஆம் ஆண்டில் ஆசிய பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டாவது முறையாக பிலிப்பைன்ஸ் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg