Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவன்று அரசியலில் பிரவேசிக்கின்றார் தீபா!

In இந்தியா
Updated: 11:04 GMT, Jan 12, 2017 | Published: 09:21 GMT, Jan 12, 2017 |
0 Comments
1307
icon_com
This post was written by : Shailu
deepa

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தினத்தன்று தன்னுடைய முதல் அரசியல் பயணத்தை தீபா ஆரம்பிக்கபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எதிர்வருகிற 17ஆம் திகதி எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் காலையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டு, தனது அரசியல் பயணத்தை தீபா ஆரம்பிக்கவுள்ளார்.

தற்போது தீபாவின் பெயரில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பேரவைகள் ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களிலும் தனித்தனியாக பேரவைகளை ஒருங்கிணைத்து எதிர்வரும் 17ஆம் திகதி அன்று தீபா தனிக் கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து அவரது கணவர் மாதவன் கருத்து தெரிவிக்கையில்,

“எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது பிறந்தநாளில் தீபா தனிக் கட்சி ஆரம்பிக்க உள்ளார். கட்சியின் பெயர், கொடி ஆகியவை பற்றி அவரே பின்னர் அறிவிப்பார்.

கடந்த ஒருமாதமாக தீபாவை ஆதரித்து தினமும் வீட்டு முன்பு பலர் திரண்டு கொண்டே இருக்கிறார்கள். அப்படி வருபவர்கள் தங்களது பெயர் மற்றும் முகவரியை தொலைபேசி இலக்கங்களுடன் பதிவு செய்து வருகிறார்கள். அந்தவகையில், இதுவரை 2 லட்சம் பேர் வரை தீபாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு ஆதரவாக உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை சந்தித்து தீபா ஆலோசனை நடத்து வருகின்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg