Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

சுகாதார காப்பீட்டு திட்டத்தை நீக்குவது குறித்த நடைமுறைகளுக்கு செனட் சபை ஒப்புதல்

In
Updated: 10:00 GMT, Jan 12, 2017 | Published: 09:59 GMT, Jan 12, 2017 |
0 Comments
1121
This post was written by : Elakkiya
File Photo: A boy waits in line at a health insurance enrollment event in Cudahy, California

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சுகாதார காப்பீட்டு திட்டத்தினை நீக்குவது குறித்த சட்டவரைவுக்கு செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

செனட் சபையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஒபாமாவின் சுகாதார காப்பீட்டு தீட்டத்தினை நீக்க வேண்டும் என்று 51 உறுப்பினர்களும் நீக்க கூடாது என்று 48 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த தீர்மானம் பிரதிநிதிகள் சபைக்கு கொண்டு செல்லப்படுகின்றது. பிரதிநிதிகள் சபையில் இந்த வாரம் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் ஒபாமாவின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை நீக்க வேண்டும் என்று கூறிவருகின்றார்.

இந்நிலையில், இந்த திட்டத்தினை நீக்குவதற்கு சில மாதங்கள் ஆகலாம் என்றும் மாற்றுத்திட்டத்தை செயன்முறைப்படுத்துவதற்கு நீண்டகாலம் தேவை என்றும் குடியரசுக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner