Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

ஐ.எஸ்.-இற்கு எதிரான போரில் கொல்லப்பட்ட பிரித்தானியரின் சடலம் மீட்பு

In
Updated: 09:33 GMT, Jan 12, 2017 | Published: 09:33 GMT, Jan 12, 2017 |
0 Comments
1162
This post was written by : Risha
Bri

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வந்த நிலையில், உயிரிழந்த பிரித்தானியர் ஒருவரது சடலம் தீவிரவாத கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக குர்திஷ் ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ்.-இன் கோட்டையாக திகழும் ராக்காவிலிருந்து தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் முனைப்புடன் நடைபெற்று வந்த மோதலில் குறித்த பிரித்தானிய பிரஜையான 20 வயதுடைய ரையன் லொக் கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து அவரது சடலத்தை தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டு பகுதிக்கு கொண்டு சென்றிருந்தனர்.

இந்நிலையில், குறித்த சடலம் மீட்கப்பட்டு வட-கிழக்கு சிரியாவிற்கு அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.