Chrome Badge

சிறந்த அணித்தலைவர்கள் பட்டியலில் கங்குலி ஏன் இல்லை? – அசாருதீன் கேள்வி

In
Updated: 09:51 GMT, Jan 12, 2017 | Published: 09:51 GMT, Jan 12, 2017 |
0 Comments
1032
collage_647_062916062405

சிறந்த அணித்தலைவர் பதவியில் இருந்தவர்கள் வரிசையில் கங்குலியை புறக்கணித்தமை தொடர்பாக ரவிசாஸ்திரிக்கு மற்றொரு முன்னாள் அணித்தலைவர் அசாருதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர் பதவிக்கு கும்ப்ளே, ரவிசாஸ்திரி உள்ளிட்ட பலர் விண்ணப்பித்து இருந்தனர். கங்குலி தலைமையிலான குழு கும்ப்ளேயை பயிற்சியாளராக தேர்வு செய்தது. இந்த விஷயத்தில் கும்ப்ளேவுக்கு ஆதரவாக கங்குலி நடந்து கொண்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக ரவிசாஸ்திரி மற்றும் கங்குலி ஆகியோர் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.

இதற்கிடையே இந்திய சிறந்த அணித்தலைவர்கள் பட்டியலை ரவிசாஸ்திரி சமீபத்தில் வெளியிட்டார். இதில் கங்குலியின் பெயர் இடம் பெறவில்லை. அவர் டோனி, கபில்தேவ், பட்டோடி, அஜித்வடேகர் ஆகியோரை குறிப்பிட்டு இருந்தார்.

இந்திய அணியின் சிறந்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த கங்குலியை ரவிசாஸ்திரி தவிர்த்து இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் கங்குலியை புறக்கணித்து இருந்தது தொடர்பாக ரவிசாஸ்திரிக்கு மற்றொரு முன்னாள் அணித்தலைவர் அசாருதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறந்த இந்திய அணித்தலைவர்கள் பட்டியலில் இருந்து கங்குலியை புறக்கணித்தது முட்டாள் தனமானது. ரவிசாஸ்திரியால் புள்ளி விவரங்களை பார்க்க முடியாதா? இந்தியாவின் சிறந்த அணித்தலைவர்கள் பட்டியலில் அவர் ஒரு சார்பாக நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது. இந்திய கிரிக்கெட்டுக்காக பாடுபட்டவர்களை அவர் அவமரியாதை செய்யக் கூடாது என அசாருதீன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)