Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பைரவா திரைவிமர்சனம்

In
Updated: 10:18 GMT, Jan 12, 2017 | Published: 10:12 GMT, Jan 12, 2017 |
0 Comments
1942
bhairava movie

“பைரவா” பொங்கல் விருந்து

கல்வி என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் நடத்தும் அநியாயங்களை இயக்குநர் பரதன் இளையதளபதி மூலமாக எடுத்துக்கூறியிருக்கின்றார்.

சென்னையில் தனியார் வங்கியில் கடன் வசூலிப்பு பிரிவில் வேலை செய்கின்ற விஜய் வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காதவர்களிடம் இருந்து பணத்தை வாங்குகின்றார். இதேவேளை திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வரும் நாயகி கீர்த்தி சுரேஷ் மீது காதல் வயப்படுகிறார்.

கீர்த்தி சுரேஷிடம் காதலைச் சொல்ல போகும்போது கீர்த்தியின் நண்பனை ரவுடிகள் கத்தியால் வெட்டி கீர்த்தி சுரேஷை விரட்டுகின்றனர். அதன்பின் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்னொரு கும்பழும் வெட்ட வருகிறது. ஆனாலும் அவர்களும் கீர்த்தி சுரேஷை எதுவும் செய்யாமல் ஓடிவிடுகிறார்கள். இதனையெல்லாம் பார்க்கும் விஜய்க்கு ஒன்றும் புரியாமல் குழம்புகிறார். தன்னை தெளிவுபடுத்திக் கொள்ள கீர்த்தி சுரேஷிடம் என்ன நடந்தது? யார் அந்த ரவுடிகள் என்று கேட்க, பிளாஷ்பேக் காட்சிகள் கண்களுக்கு வருகின்றன.

திருநெல்வேலியில் பெரிய தொழிலதிபராக இருக்கும் ஜெகபதிபாபு ஒரு மருத்துவ கல்லூரியை இயங்கிக் கொண்டிருக்கின்றார். அந்த கல்லூரியில்தான் கீர்த்தி சுரேஷ் படித்துக் கொண்டிருக்கிறார். கல்லூரியின் தரம் மட்டமாக இருப்பதை மாணவர்கள் சிலர் மத்திய அரசுக்கு தெரிவித்து விடுகிறார்கள். அதன்பின் மத்திய அரசுக் குழு அந்த கல்லூரியில் சோதனை மேற்கொண்டு கல்லூரி உரிமையை ரத்து செய்ய முடிவெடுக்கிறது. இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழிக்கும் ஜெகபதிபாபு செய்யும் பல தவறுகளால் ஒரு மாணவியின் உயிர் பறிக்கப்படுகிறது. இதனை கண்டு அஞ்சாமல் ஜெகபதிபாபு மீது கீர்த்தி பொலிஸில் முறைப்பாடு கொடுக்கிறார்.

ஜெகபதிபாபுவின் வலது கையாக இருந்து அனைத்து வேலைகளையும் டானியல் பாலாஜிதான் செய்து கொடுக்கிறார். வழக்கு முடியும்வரை கீர்த்தி சுரேஷுக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று கோர்ட் உத்தரவிடுகிறது. ஆதாரங்களை சேகரிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் கீர்த்தி. இதன்பின்னர் கீர்த்திக்கு உதவும் நோக்குடன் விஜய் திருநெல்வேலிக்கு வருகிறார். ஜெகபதிபாபுவுக்கு எதிராக அவர் சேகரிக்கும் ஆதாரங்கள்தான் படத்தின் இரண்டாம் பாதி.

ஆக்‌ஷன், கொமெடி, காதல் என அனைத்தையும் வரிசையாக சரிவர பரிமாறியிருக்கிறார் இயக்குநர். இசை சந்தோஷ் நாராயணன் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்தான். ஆனால் வர்லாம் வர்லாம் வா பைரவா பாடல் மட்டும்தான் ரசிகர்களை ஆடவைக்கின்றது. பின்னணி இசை சுமார் ரகம்.

ஒளிப்பதிவு சுகுமார் – மைனா, கும்கி, தர்மதுரை என வித்தியாசமான படங்களில் தன் திறமையை நிரூபித்தவர். பைரவா படத்திலும் அதை திறம்பட ச் செய்து காட்டியிருக்கிறார்.

இயக்குநர் பரதன் 10 வருஷத்துக்கு முன்னர் அழகிய தமிழ்மகன் என்ற படத்தில் விஜய் மூலமாக அறிமுகமானார். அந்தப் படம் சரியாக ஓடவில்லை என்றாலும் பரதனனுக்கு இன்னுமொரு வாய்ப்பினை விஜய் கொடுத்திருந்தார். பரதனும் அதனைச் சரியாக பயன்படுத்தியுள்ளார். விஜய்யை எப்படி காட்டினால் ரசிகர்கள் ரசிப்பார்களோ அதை மட்டும் செய்திருக்கிறார்.

வாழ்த்துகள் பரதன்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)