Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட விசா! – நிதியமைச்சு தெரிவிப்பு

In
Published: 10:19 GMT, Jan 12, 2017 |
0 Comments
1168
This post was written by : Varshini
ravi karunanayake

இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையான வதிவிட விசா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூன்று இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான நிதியை முதலீடு செய்பவர்களுக்கே இச் சலுகை வழங்கப்படுமென கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முதலீடு செய்வதற்காக, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து இதுவரை 5000 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட விசா வழங்கப்படுமென கடந்த 2016ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாகவே இந்த யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.