Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மனநோயாளிக்கு மரணதண்டனை நிறைவேற்ற பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

In
Updated: 10:55 GMT, Jan 12, 2017 | Published: 10:55 GMT, Jan 12, 2017 |
0 Comments
1138
icon_com
This post was written by : Elakkiya
download (39)

பாகிஸ்தானில் பலத்த எதிர்ப்பையும் மீறி மனநோயாளி ஒருவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்ற உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹைசர் சையத் என்னும் 55 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னுடன் பணிபுரிந்த சக உத்தியோகத்தர் ஒருவரை கடந்த 2003 ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றார்.

இது குறித்த வழக்கு விசாரணைகளின் போது அவருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் சிறையிலிருந்த ஹைசர் சையத்திற்கு மனநோய் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக ஹைசர் சையத்தின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இவ்வாறிருக்க மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்ற கூடாது என ஐ.நா சபை உட்பட மேலும் பல சமூக அமைப்புக்கள் வலியுறுத்தின.

இந்த நிலையில் ஹைசர் சையத்திற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றலாமா? என்பது குறித்து சிறைத்துறை சார்பில் உள்ளூர் நீதிமன்றில் கேட்கப்பட்டது.

இதன்படி எதிர்வரும் 17 ஆம் திகதி ஹைசர் சையத்திற்கு மரணதண்டனை  நிறைவேற்றுமாறு குறித்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg