Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இயக்குநர் தரணுடன் இணையும் நடிகர் விமல்

In சினிமா
Updated: 10:46 GMT, Jan 12, 2017 | Published: 10:42 GMT, Jan 12, 2017 |
0 Comments
1352
This post was written by : S.K.Guna

நடிகர் விமல் நடிப்பில் இதுவரை 22 படங்கள் வெளிவந்துள்ளன. களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, கலகலப்பு, மாப்ள சிங்கம் படங்கள் பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. பல படங்கள் சுமார் ரகமாக இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு நட்டத்தை கொடுக்கவில்லை.

திருட்டு விசிடி முன்கூட்டியே வெளிவந்தபோதும் ” மாப்ள சிங்கம் ” திரைப்படம் தமிழக திரையரங்குகளில் 5 கோடி ரூபாய் வசூல் செய்தது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக இருந்தால் வசூல் சக்கை போடு போடும் என்பதற்கு தேசிங்கு ராஜா, கலகலப்பு, மாப்ள சிங்கம் படங்கள் உதாரணமாகும்.

இவரது நடிப்பில் வெளிவந்த ” காவல் ” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் தமிழக திரையரங்குகள் மூலம் கிடைத்த வசூல் மட்டும் 1.5 கோடி ஆகும்.

இந்நிலையில் சரிந்து விழுந்த தன்னுடைய இமேஜை நிலை நிறுத்தும் வகையில் நடிகர் விமல், இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் ” மன்னர் வகையறா ” என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

தன்னுடைய சொந்த படமாக இருந்தாலும் தனக்கான முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு ஆனந்தி, பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ ஷங்கர், சிங்கம் புலி, வம்சி கிருஷ்ணா, கார்த்திக், நீலிமா ராணி, ஜெய பிரகாஷ், என நட்சத்திர பட்டாளங்களை உடன் வைத்து கொண்டு பயணம் செய்கிறார்.

இதுவரை 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீதி படத்தை முடிப்பதற்கு நன்கு திட்டமிட்டு டிசம்பர் 12 முதல் படப்பிடிப்பை நடத்த ஆயத்தமான நிலையில் வர்தா புயலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. டிசம்பர் 12 அன்று SKR பொறியியல் கல்லூரியில் படப்பிடிப்பு நடத்த இருந்த நிலையில் புயலால் மரங்கள் விழுந்து விட்டதால் படப்பிடிப்பு தடைபட்டது.

“மன்னர் வகையறா” படத்தின் வெளியீட்டிற்கு பின்னரே அடுத்த படத்தில் நடிப்பது என்று முடிவெடுத்திருந்த நடிகர் விமல் ” மன்னர் வகையறா ” திரைப்படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்து வரும் காட்சிகள் பெருமளவில் இருப்பதால் அவர்களை ஒருங்கிணைத்து படப்பிடிப்பை நடத்த காலதாமதமாகி வருவதால் அதற்கிடையில் ஒரு சிறிய படத்தை முடித்துவிட திட்டமிட்டுள்ளார்.

இயக்குநர் ‘தரண்’ சொன்ன கதை பிடித்து போனதால் அவரருடைய இயக்கத்தில் நடிக்க விமல் ஒப்புக்கொண்டுள்ளார். மார்ச் மாதம் முதல் வாரத்தில் படத்தை தொடங்கி ஜூலை முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg