Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

எஃப்.எம் வானொலி வலையமைப்பை நிறுத்துகிறது நோர்வே

In
Updated: 10:45 GMT, Jan 12, 2017 | Published: 10:45 GMT, Jan 12, 2017 |
0 Comments
1084
FM

நோர்வேயில் எஃப்.எம் வானொலி வலையமைப்பு நேற்று (புதன்கிழமை) முதல் நிறுத்தப்பட்டு, முழுமையாக டிஜிட்டல் வலையமைப்பாக மாற்றம் பெறுகிறது.

அதன்படி உலகிலேயே எஃப்.எம் வானொலி வலை அமைப்புகளை நிறுத்திய முதல் நாடு என்ற பெருமையை நோர்வே பெற்றுள்ளது.

அங்குள்ள வானொலி வலையமைப்பை, மொத்தமாக டிஜிட்டல் ஒலிபரப்பாக நோர்வே மாற்றுகிறது. டி.ஏ.பி எனப்படும் இந்த டிஜிட்டல் ஒலிபரப்பு தொழில்நுட்பம் மேம்பட்ட தரம் கொண்டதாகவும், மலிவானதாகவும் இருக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

நோர்வேயில் உள்ள கார்களின் பெரும்பாலானவற்றில் டிஜிட்டல் ஒலிபரப்பு வசதி இல்லாமையால், நோர்வே மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக அண்மைய கருத்துக் கணிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டது.

எஃப்.எம் வானொலி வலையமைப்பு நிறுத்தப்படும் நடவடிக்கையானது, முதல் கட்டமாக நோர்வேயின் வடக்கு நகரான போடேவில் அமுலுக்கு வருவதாகவும், பின்னர் இவ்வாண்டு இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் இவ்வலையமைப்பு நிறுத்தப்பட்டு டிஜிட்டல் வலையமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.