Chrome Badge

எதிர்வரும் 23ஆம் திகதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆரம்பம்

In
Updated: 11:12 GMT, Jan 12, 2017 | Published: 10:53 GMT, Jan 12, 2017 |
0 Comments
1107
Tamil Nadu Assembly

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் ஆரம்பமாகின்றது.’ என்று கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த கூட்டத்தொடர் 5 நாட்கள் வரை நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)