சிம்லாவில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கடும் குளிர் நிலவி வருகிற நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் சாலைகள் முழுவதும் பனி படர்ந்து காணப்படுவதோடு, போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பல இடங்களில் கட்டடங்களும், வாகனங்களும் வெண்ணிற போர்வை போர்த்தியதுபோல பனி படர்ந்து காட்சியளிக்கின்றது.
தட்பவெப்ப நிலை குறைந்துள்ளதால் கடும் குளிர் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் நடமாட்டமும் மிகவும் குறைந்து காணப்படுவதாக கூறப்படுகின்றது.
மேலும் கடும் குளிர் காரணமாக சிம்லாவில் மட்டும் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.