Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊழல் குற்றச்சாட்டில் அமெரிக்கர் ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை

In ஐரோப்பா
Updated: 12:37 GMT, Jan 18, 2017 | Published: 12:36 GMT, Jan 18, 2017 |
0 Comments
1413
This post was written by : Elakkiya

நோர்வேயின் பிரபல உர நிறுவனமான யாரா நிறுவனத்தின் வர்த்தகத்துறை தலைமை சட்ட ஆலோசகரான அமெரிக்காவைச் சேர்ந்த நபருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நோர்வே ஒஸ்லோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நோர்வேயில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல் மோசடி வழக்கில் அமெரிக்கரான கென்ட்ரிக் வாலஜூக்கும் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சிறைத் தண்டனைக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பகுதியளவு அரசுக்கு உரித்துடைய யாரா நிறுவனம் மேலதிக ஒப்பந்தங்களை பெறும் முயற்சியாக லிபிய மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

நோர்வே வரலாற்றில் இதுவே மிகப்பெரிய ஊழல் மோசடி என்று ஊடகங்கள் அறிக்கையிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg