Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டிரம்ப்புக்கு ஒபாமா நிர்வாகம் எச்சரிக்கை

In
Updated: 06:09 GMT, Jan 20, 2017 | Published: 06:09 GMT, Jan 20, 2017 |
0 Comments
1433
This post was written by : Elakkiya

சீனாவுடன் பகைமை பாராட்டினால் ஆபத்தில் முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக ஒரே சீனா என்ற கொள்கையை டிரம்ப் மீண்டும் கிளப்புவது அபாயகரமானது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீனாவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு விவகாரங்களை மீண்டும் ஆரம்பிப்பதால் அமெரிக்கா சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என்றும் மாறாக ஆபத்திலேயே முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒபாமா நிர்வாகத்தில் உள்ள உதவி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் தெரிவிக்கையில், ‘ சீனா எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் வராது. எனவே ஒரே சீனா போன்ற ஆபத்தான கொள்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதால் எந்த பயனும் இல்லை. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் உலகிலேயே முக்கியமான இருதரப்பு உறவுகள் இருந்து வருகின்றன. எமது முக்கிய அயல்நாட்டு கொள்கைகளில் பெரும்பாலானவை அமெரிக்க-சீன கூட்டுறவால் சாதிக்கப்பட்டதே. எனவே சீனாவுடன் சுமூகமான உறவுகளை கொண்டிருப்பதன் மூலமே பயன்களை பெற்றுக் கொள்ள முடியும். ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg