Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவில் இனிமேல் படுகொலைகளுக்கு வாய்ப்பில்லை : ஜனாதிபதி ட்ரம்ப்

In
Updated: 04:56 GMT, Jan 21, 2017 | Published: 04:56 GMT, Jan 21, 2017 |
0 Comments
1378
This post was written by : Sylviya

அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக நேற்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் படுகொலைகளை  தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன் கைவிடப்பட்ட தொழிற்சாலைகள், அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் தோல்வியை சந்தித்த கல்வியமைப்பு முறைகள் என்பவற்றை நினைவுகூர்ந்த ட்ரம்ப், தனது ஆட்சியில் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

தனது பதவியேற்பு நிகழ்வின் பின்னர் இவ்விடயம் தொடர்பில் மக்களுக்கு  கருத்து தெரிவித்த ட்ரம்ப், “இந்த நிமிடத்திலிருந்து அமெரிக்காவில் கொலைச் சம்பவங்கள் ஏற்படாது தடுத்து நிறுத்தப்படும்” என தெரிவித்தார்.

நேற்று அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வை பார்வையிடும் பொருட்டு உலகெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பதவியேற்பு நிகழ்வுகள் நிறைவுபெற்றமையின் பின்னர், அமெரிக்காவின் ஜனாதிபதி எனும் ஸ்தானத்திலிருந்து சில ஒப்பந்தங்களில் ட்ரம்ப் கைச்சாத்திட்டமை காணக்கூடியதாக இருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg