Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவிட்ஸர்லாந்து வான்பரப்பை அலங்கரித்த வெப்பகாற்று பலூன்கள்

In ஐரோப்பா
Updated: 08:22 GMT, Jan 22, 2017 | Published: 08:22 GMT, Jan 22, 2017 |
0 Comments
1388
This post was written by : Elakkiya

வெப்பகாற்றுக்கள் அடைக்கப்பட்ட வர்ண பலூன்களால் சுவிட்ஸர்லாந்து வானம் அழகாக காட்சி அழிக்கின்றது.

சுவிட்ஸர்லாந்தில் வருடம்தோறும் நடைபெறும் வெப்பகாற்றுக்கள் அடைக்கப்பட்ட வர்ண பலூன்களை வானில் பறக்கவிடும் ‘ஹொட் எயார் பலூன் திருவிழா’ நேற்று (சனிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. Chateau d’Oex நகரில் நடைபெறும் இந்த திருவிழாவுக்காக 15 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 70 விமானிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த சர்வதேச பலூன் திருவிழா ஒழுங்கமைப்புக் குழுவின் தலைவர், ‘ பனிமூட்டம் மற்றும் சூரியனுடன் இணைந்த ஒரு அழகான இயற்கையை நாம் கொண்டிருக்கின்றோம். இதனை ஒவ்வொரு ஆண்டும் சொல்ல முடியும். வானில் தோன்றி மறையும் சுவரோவியங்களை நாம் வரைவதற்கு இந்த பலூன்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.

விமானி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘. Chateau d’Oex    நகரம் 39 ஆவது வருடமாக இந்த திருவிழாவை காண்கின்றது. குளிர்காலத்தில் சுற்றுலா மேற்கொள்வதற்கு மிகச்சிறந்த இடம் இது.இந்த வாரத்தை கழிப்பதற்கு இதுவே சிறந்த வழி.’ என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு நடைபெறவுள்ள இந்த திருவிழாவை பார்த்து மகிழ்வதற்காக 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பொதுமக்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg