Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நெதர்லாந்து நீதித்துறை அமைச்சர் பதவி ராஜினாமா

In ஐரோப்பா
Updated: 05:22 GMT, Jan 28, 2017 | Published: 05:22 GMT, Jan 28, 2017 |
0 Comments
1199
icon_com
This post was written by : Elakkiya
_93834347_hi037529098

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டின் அமைச்சரவையின் முக்கிய உறுப்பினரான நீதித்துறை அமைச்சர் அர்ட் வான் டெர் ஸ்டெயூர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பதவி ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களின் இழப்பீட்டு தொகையில் இடம்பெற்ற ஊழல் விவகாரம் காரணமாக வான் டெர் ஸ்டெயூர் பதவி ராஜினாமா செய்துள்ளார். இவரது பதவி ராஜினாமா பிரதமர் மார்க் ரூட்டின் அரசுக்கு பாரிய இழப்பாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஏற்கனவே ஊழல் விவகாரத்தினால் மார்க் ரூட் அமைச்சரவையின் இரு அமைச்சர்களான முன்னாள் நீதித்துறை அமைச்சர் இவோ ஒப்ஸ்டெல்டன் மற்றும் அவரது துணை அமைச்சர் பிரெட் ரீவன் ஆகியோர் கடந்த 2015 ஆம் ஆண்டு பதவி விலகினர்.

இந்நிலையில், வான் டெர் ஸ்டெயூர் அமைச்சரவையின் மூன்றாவது அமைச்சராக பதவி ராஜினாமா செய்திருப்பது வலதுசாரி தாராளவாத கட்சியை ஆட்டம் காண வைத்துள்ளது என்றே கூறமுடியும்.

நெதர்லாந்து எதிர்வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், வலதுசாரி தாராளவாத கட்சி ஏற்கனவே கருத்துக்கணிப்புகளில் பின் தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg