Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்ப்பின் அறிவிப்பு மூன்றாம் உலகப் போரை தோற்றுவிக்கும்: சொந்த கட்சியில் எதிர்ப்பு

In
Updated: 05:47 GMT, Jan 31, 2017 | Published: 04:24 GMT, Jan 31, 2017 |
0 Comments
1520
This post was written by : Anojkiyan

7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை பிறப்பித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், இவரது குறித்த அறிவிப்பானது மூன்றாம் உலகப் போர் மூளும் நிலையை தோற்றுவித்துவிடும் என குடியரசு கட்சி தலைவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த உத்தரவினால், உலக அளவில் தொழில் செய்து வரும் பன்னாட்டு நிறுவனங்களும் கடுமையான பாதிப்பை சந்திக்கும் நிலையை டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்த உடனேயே அது அமுலுக்கு வந்து விட்டதால் ஆங்காங்கே விமான நிலையங்களில் வெளிநாட்டினரை தடுத்து வைத்துள்ளனர். இதனால் பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், சொந்த கட்சியான குடியரசு கட்சி தலைவர்களே ட்ரம்புக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். 2008 தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவரும், தற்போதைய செனட் உறுப்பினருமான ஜான்மெக்கேன், குடியரசு கட்சியின் மற்றொரு உறுப்பினர் மெக்னால் ரன்டகி ஆகியோர் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘டொனால்ட் ட்ரம்ப் யாருடனும் உரிய ஆலோசனை கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகளை அறிவித்துள்ளார். அமெரிக்க அரசு, பாதுகாப்பு அமைப்பு, நீதிபதிகள், சர்வதேச பொறுப்பு அமைப்புகள், உள்துறை அமைப்புகள் என யாரிடமும் அவர் கலந்து ஆலோசிக்கவில்லை.

இவருடைய முடிவால் நாட்டுக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. உலக நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்கும் நிலையை அவர் உருவாக்கி இருக்கிறார். இது ஒருவேளை 3ஆம் உலகப் போர் மூளும் நிலையை உருவாக்கி விடுமோ? என அஞ்சுகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg