Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேப்பாப்பிலவு விவகாரம்: பிரதமர் ரணிலுடன் கொழும்பில் நாளை சந்திப்பு

In இலங்கை
Updated: 11:42 GMT, Feb 8, 2017 | Published: 11:38 GMT, Feb 8, 2017 |
0 Comments
1293
This post was written by : Varshini

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த 9 தினங்களாக முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், இவ்விடயம் தொடர்பாக நாளை (வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்துகொள்வதற்காக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஐந்து பேர் இன்று மாலை கொழும்புக்கு பயணமாகவுள்ளனர்.

எனினும் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை சத்தியாக்கிர போராட்டம் தொடருமென கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காணாமல்போன தமது உறவுகள் குறித்த உண்மையை பகிரங்கப்படுத்துமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் வவுனியாவில் அவர்களது உறவினர்கள் தொடர்ந்து நான்கு தினங்கள் உண்ணாவிரத போராட்டமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக நாளைய தினம் அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூகமான தீர்வொன்று எட்டப்படுமென அரசாங்கத்தின் பிரதிநிதியாக அங்கு சென்றிருந்த பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இவ்விரு விடயங்கள் தொடர்பாகவும் நாளைய தினம் ஒன்றாக கலந்துரையாடப்பட்டு தீர்மானமொன்று எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg