Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களின் கட்டமைப்பை மாற்ற ஐ.சி.சி திட்டம்!

In கிாிக்கட்
Published: 09:06 GMT, Feb 9, 2017 |
0 Comments
1185
icon_com
This post was written by : Anojkiyan
The International Cricket Council (ICC) logo at the ICC headquarters in Dubai

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களின் கட்டமைப்பை மாற்ற சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.சி.சி திட்டப்படி, இரு நாடுகள் மோதும், ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்கு பதிலாக மேலும் ஓரிரு, நாடுகளையும் சேர்த்துக்கொண்டு லீக் மாதிரியிலான போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

மேலும், டெஸ்ட் விளையாடும் நாடுகளுடன் மேலும் பல சிறிய நாடுகளையும் டெஸ்ட் விளையாடும் நாடுகள் என்ற அந்தஸ்துக்கு தரம் உயர்த்தவும் ஐ.சி.சி திட்டமிட்டுள்ளது.

அதேநேரம், சிறிய நாடுகள் அவர்களுக்குள் மோதிக்கொள்ளும் வகையில் போட்டிகள் அமைக்கப்படும். டெஸ்ட் விளையாடும் அங்கீகாரம் கொண்ட நாட்டு அணிகள் அந்த சிறய அணிகளுடன் மோதமுடியாது. இதன்மூலம், போட்டியின் சுவாரசியம் பாதுகாக்கப்படும்.

மண்டல அளவில் ரி-ருவென்ரி போட்டிகளையும் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. இவ்வாறான பல திட்டங்களின் மூலம் பல நாடுகளின் ரசிகர்களும் அப்போட்டித் தொடரை பார்ப்பதால் வருவாய் அதிகரிக்கும். போட்டித்தொடர் இன்னும் சுவாரசியமாக இருக்கும் என ஐ.சி.சி தரப்பில் கூறப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg