Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் தடைக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்: டிம் குக்

In
Published: 08:54 GMT, Feb 9, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Risha

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் திணிக்கப்பட்ட ஏழு முஸ்லிம் நாடுகள் மீதான பயணத் தடையை கடுமையாக விமர்சித்த அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக், இதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரி டிம் குக்-இற்கு கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் வைத்து கௌரவ டொக்டர் பட்டம் வழங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த பயணத் தடையால் எமது ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும் பெரும் நெருக்கடியான சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

ட்ரம்ப்பின் இந்த ஆணைக்கு நாம் ஒருபோதும் ஆதரவளிக்க போவதில்லை. அதேவேளை, ட்ரம்ப்பின் கட்டளையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாம் ஆதரவாக செயற்படுவதாகவும் அவர் உறுதியளித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg