Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியல் யாப்பு: சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்மானம்

In இலங்கை
Updated: 08:34 GMT, Feb 9, 2017 | Published: 08:31 GMT, Feb 9, 2017 |
0 Comments
1148
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
new constitutionn

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமென அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளனார்.

எதிரணியினரால் இன்றைய தினம் (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடனேயே சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்வோம் என்றும், புதிய அரசியல் யாப்பிற்கான எந்தவொரு பிரிவையும் இதுவரை தயாரிக்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் புரையோடிக் காணப்படும் தேசிய இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்வு காணப்படுமென சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்பிற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவது குறித்து ஏற்கனவே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், குறிப்பாக அரசாங்கத்திற்குள்ளேயே இருவேறுபட்ட நிலைப்பாடு காணப்பட்டது. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் புதிய அரசியலமைப்பை இலகுவாக வெற்றிகொள்ளலாமென் அமைச்சர் மங்களவும் அவ்வாறு நடத்தினால் பிரதமர் வீடு செல்ல நேரிடுமென அமைச்சர் சம்பிக்கவும் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg