Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்மார்ட்போனில் எக்ஸ்-ரே வசதி வழங்கும் புதிய செயலி

In தொழில்நுட்பம்
Updated: 08:39 GMT, Feb 9, 2017 | Published: 08:39 GMT, Feb 9, 2017 |
0 Comments
1227
This post was written by : Elakkiya

ஸ்மார்ட்போனில் எக்ஸ்-ரே வசதி வழங்கும் புதிய ஸ்மார்ட்போன் செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை கொண்டு பழ வகைகளை சாப்பிடும் முன்னர் அதனுள் புழு அல்லது பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஸ்மார்ட்போன் கொண்டு நேரடியாக பார்க்க முடியும். பொறியாளர்கள் உருவாக்கியுள்ள புதிய செயலி மூலம் பொருளை ஸ்கான் செய்து அதனுள் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஃபிரான்ஹோஃபர் ஃபேக்ட்ரி ஒப்பரேஷன் மற்றும் ஒட்டோமேஷன் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் ஹாக்ஸ்பெக்ஸ் மொபைல் (ர்யறமளுpநஒ அழடிடைந) எனும் செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலி பொருட்களை ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கான் செய்து அதனுள் இருப்பதை கண்டறிய வழி செய்கிறது.

எடுத்துக் காட்டாக அப்பிள் பழம் ஒன்றை ஸ்கான் செய்ய வேண்டுமாயின் ஹாக்ஸ்பெக்ஸ் செயலியை ஸ்மார்ட்போனில் ஓபன் செய்து பழத்தை ஸ்கான் செய்ய வேண்டும். ஸ்கான் செய்யப்பட்டதும் அப்பிள் பழத்தில் உள்ள பூச்சிக் கொல்லி எச்சங்கள் மற்றும் அதன் உறுப்புக்கள் ஸ்மார்ட்போன் திரையில் தெரியும்.

சந்தையில் ஏற்கனவே பல்வேறு ஸ்கானிங் சாதனங்கள் இருந்தாலும் இவை ஸ்மார்ட்போனில் கூடுதலாக வேலை செய்யும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg