Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்மோகன் சிங் குறித்து பிரதமர் மோடி செய்த விமர்சனம் வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி

In இந்தியா
Updated: 09:00 GMT, Feb 9, 2017 | Published: 08:57 GMT, Feb 9, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Shailu
rahul-gandhi-net-worth

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் தெரிவித்த விமர்சனம் வருத்தமளிப்பவையாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்க வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது, ‘இதுபோன்ற மோசமான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் மோடி தம்மை தாமே சிறுமைப்படுத்திக்கொள்வதாக விமர்சித்துள்ளார்.

தம்மைவிட வயதில் மூத்த ஒரு முன்னாள் பிரதமரை, தற்போதைய பிரதமர் கேலி செய்வது நாடாளுமன்றத்தின் மாண்பையும் நாட்டின் கண்ணியத்தையும் குலைக்கும் செயல்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்து பிரதமர் மோடி நேற்று (புதன்கிழமை) உரையாற்றினார்.

இதன்போது, ‘குளியலறையில் மழைக்கோட்டை அணிந்து கொண்டு எப்படி குளிப்பது என்ற வித்தை நன்குத் தெரிந்தவர் மன்மோகன் சிங் என விமர்சித்தார். அவரை சுற்றியும் ஊழல் நடைபெற்ற போதும் மன்மோகன் சிங் மீது எந்த கரையும் படியவில்லை என்றும் குறிப்பிட்டத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg