Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க மெய்வல்லுனர் வீராங்கனை டோன் ஹார்பர் நெல்சனுக்கு போட்டித் தடை!

In விளையாட்டு
Published: 09:37 GMT, Feb 9, 2017 |
0 Comments
1116
icon_com
This post was written by : Anojkiyan
Track Town Classic Edmonton 2016

அமெரிக்க முன்னணி மெய்வல்லுனர் வீராங்கனையான டோன் ஹார்பர் நெல்சனுக்கு மூன்று மாத கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஒலிம்பிக் சம்பியனான 32 வயதான டோன் ஹார்பர், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாலேயே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயர் குருதியழுத்தத்திற்கு hydrochlorothiazide என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து வகை வழங்கப்பட்டுள்ளதாக ஹார்பர் தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு சீன ஒலிம்பிக் போட்டியில் 100 தடைதாண்டி ஓடுதல் போட்டியில் தங்கப் பதக்கமும், 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் ஹார்பர் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg