Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உளவியல் சேவைகளுக்காக ஒன்ராறியோ நிதியுதவி

In கனடா
Updated: 10:43 GMT, Feb 9, 2017 | Published: 10:43 GMT, Feb 9, 2017 |
0 Comments
1097
icon_com
This post was written by : Shailu
men

ரொறொன்ரோ நகரம், அடுத்த மூன்று வருடங்களில் மனநல சுகாதார சேவைகள், போதைக்கு அடிமையானவர்களின் சேவைகள் -உளவியல் சேவைகள் மற்றும் ஆதரவான வீடமைப்புக்கள் உட்பட்ட சேவைகளுக்காக 140மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் எரிக் ஹொஸ்கின் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியானது 2015-16ல் இச்சேவைகளிற்காக மாகாணம் ஏற்கனவே ஒதுக்கியுள்ள 3.7பில்லியன் டொலர்களை விட அதிகம் என தென லிபரல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஒட்டாவாவின் தற்போதைய சலுகை பிரகாரம் ஒன்ராறியோ மனநல சுகாதார சேவைகளிற்காக 38மில்லியன் டொலர்களை பெறும் எனவும், மாகாணத்தின் செலவினங்களில் இத்தொகை ஒரு சதவிகதமாகும் என கூறப்படுகின்றது.

இத்திட்டத்தில் இளைஞர்களிற்கான சுகாதார மையங்கள் மற்றும் கிட்டத்தட்ட 1150 மேலதிக ஆதரவு வீட்டு அலகுகளிற்கு செலவிடப்படும்.

வீடற்ற அல்லது வீடற்ற நிலை ஏற்படும் அபாயத்தில் உள்ளவர்கள் மற்றும் மனநோய் அல்லது போதைக்கு அடிமையானவர்கள் வாழ்வதற்கும் ஒரு இடமாகவும் ஆலோசனை அணுகலிற்கும் வழிவகுப்பதோடு, இளைஞர் வதிவிடங்கள் 12மற்றும் 25வயதிற்கு உட்பட்டவர்களிற்கு வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg