Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’

In சினிமா
Updated: 10:34 GMT, Feb 9, 2017 | Published: 10:21 GMT, Feb 9, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : S.K.Guna
vijay Antony

‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’, மற்றும் ‘எமன்’ ஆகிய பெயர்கள் யாவும் விஜய் ஆண்டனி நடித்த சில படங்களின் தலைப்புகள்.

குறுகிய காலத்தில், தென்னிந்திய திரையுலகின் வர்த்தக உலகில், தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை பெற்று இருக்கிறார், இசைமைப்பாளர் – கதாநாயகன் விஜய் ஆண்டனி.

ரசிகர்களை கவரக்கூடிய தரமான கதையம்சம், வர்த்தக வெற்றிக்கு தேவையான கதைக்களம், என இந்த இரண்டும் ஒருங்கே இணைந்து இருக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதால், மொழிகளை கடந்து, தென்னிந்திய திரையுலகில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.

தன்னுடைய திரைப்படங்களுக்கு எப்போதுமே வித்தியாசமான தலைப்புகளை தேர்ந்தெடுப்பது விஜய் ஆண்டனியின் தனித்துவமான சிறப்பு. அவருடைய வெற்றிக்கு அதுதான் முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில், அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம், தமிழக மக்களின் உள்ளத்தில் நிலைத்திருக்கும் சிறந்த தலைவரான ‘அண்ணாதுரை’ யின் பெயரை பெற்று இருக்கிறது.

வர்த்தக உலகில் வெற்றிகரமான கதாநாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் ‘வித்தியாசமான தலைப்பு’ பாணி, இந்த ‘அண்ணாதுரை’ படத்திலும் தொடர்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

‘ஐ பிச்சர்ஸ்’ சார்பில் ஆர். சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் இந்த ‘அண்ணாதுரை’ படத்தை, அறிமுக இயக்குநர் சீனுவாசன் இயக்க இருக்கிறார். இவர் இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg