Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்செஸ்டர் பாடசாலையில் சக மாணவரால் தாக்கப்பட்ட திருநங்கை

In
Updated: 11:14 GMT, Feb 9, 2017 | Published: 11:14 GMT, Feb 9, 2017 |
0 Comments
1126
icon_com
This post was written by : Elakkiya
nintchdbpict000300362732

மன்செஸ்டர் பாடசாலை ஒன்றில் 11 வயது நிரம்பிய திருநங்கை ஒருவர் நேற்று (புதன்கிழமை) BB துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் சக மாணவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார், தனது மகள் பாடசாலையில் கொடுமைப்படுத்தப்படுவதை தடுப்பதற்கு குறித்த பாடசாலை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களாக தனது மகள் வாய்மொழி மூல துஷ்பிரயோகத்திற்கும் அவமதிப்பிற்கும் முகம் கொடுத்ததுடன் சக மாணவர்களால் தாக்கப்பட்டதாகவும் இது குறித்து பாடசாலைக்கு அறியப்படுத்திய போதிலும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நேற்றை சம்பவம் மிகவும் தீவிரமான ஒன்று என பாடசாலை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg