Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமாவுக்கு வந்து 5 வருடங்கள் பூர்த்தி: சிவகார்த்திகேயன் நன்றி தெரிவிப்பு

In சினிமா
Updated: 11:17 GMT, Feb 9, 2017 | Published: 11:17 GMT, Feb 9, 2017 |
0 Comments
1125
This post was written by : Shailu

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்து 5 வருடம் பூர்த்தியானதை முன்னிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கருத்து தெரிவித்துள்ளதாவது,

‘2012 பெப்ரவரி 3ஆம் திகதி பெரிய திரையில் என்னைப் பார்த்தேன். பல அனுபவங்களுடன் இந்த 5 வருடம் அற்புதமாக கடந்திருக்கிறது.

நீங்கள் கொடுத்த இப்படி ஒரு வாழ்க்கையை கனவிலும் நினைத்துப் பார்த்தது இல்லை. என்னுடைய சகோதரர்கள், சகோதரிகள், என்னுடைய அனைத்து படக்குழுவினர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், அனைத்து நட்சத்திரங்கள், ஊடகங்கள், ரசிகர்கள் எனக்கு அன்பும், ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

இந்த பயணத்தை ஆரம்பித்த வைத்த பாண்டிராஜ் சாருக்கு சிறப்பு நன்றி. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறேன். எப்போதும் கற்றுக் கொள்வேன்.

பொழுது போக்கான படங்களை கொடுக்க என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வேன். மீண்டும் ஒரு நன்றி. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg