Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்.மாணவர்களின் கொலை: பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை
Published: 11:08 GMT, Feb 9, 2017 |
0 Comments
1043
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
5-police-officials-01

யாழ்ப்பாணம் – கொக்குவில் குளப்பிட்டி பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து பொலிஸ் அதிகாரிகளையும் தொடர்;ந்து எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று (வியாழக்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்;கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் எஸ்.சதீஸ்கரன் இவ் உத்தரவை பிறப்பித்தார்.

யாழ். பல்லைக்கழகத்தில் கல்விகற்று வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த கஜன் மற்றும் சுலக்ஷன் எனும் இரு மாணவர்கள், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி பிரதேசத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த சம்பவத்தை விபத்தென பொலிஸார் சோடித்திருந்தாலும், ஒரு மாணவனின் உடலில் துப்பாக்கிச்சூட்டு காயம் காணப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதியாகியதையடுத்து சம்பவ நேரத்தில் கடமையில் இருந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர். கஜன் எனும் மாணவன் சட்டுக்கொல்லப்பட்டதைக் கண்ட சக மாணவனாக சுலக்ஷனை பொலிஸார் அடித்துக்கொன்றதாகவும் தவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg