Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னை மெரீனாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

In இந்தியா
Updated: 11:11 GMT, Feb 9, 2017 | Published: 11:10 GMT, Feb 9, 2017 |
0 Comments
1063
This post was written by : Risha

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மெரீனாவில் இளைஞர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஓ.பி.எஸ்.-இற்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு பொலிஸார் தகவல் வெளியிட்டனர்.

இதனை தொடர்ந்து காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை பொலிஸாரை ஈடுபடுத்தி பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி கடந்த மாதம் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மெரீனாவில் தொடர் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg