Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பங்களாதேஷ் டெஸ்டில் விஜய்-கோஹ்லி சதம்: வலுவான நிலையில் இந்தியா

In கிாிக்கட்
Updated: 11:33 GMT, Feb 9, 2017 | Published: 11:29 GMT, Feb 9, 2017 |
0 Comments
1274
This post was written by : Anojkiyan

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 356 ஒட்டங்களை குவித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) ஜதராபாத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் இணைப்பாட்டம் ஏமாற்றம் அளித்தது. இளம் வீரரான லோகேஷ் ராகுல் முதல் ஓவரிலேயே இரண்டு ஒட்டங்களுடன் டஸ்கின் ஹமட்டின் பந்து வீச்சுக்கு போல்ட் முறையில் ஆட்டமிழந்து களத்தை விட்டு வெளியேறினார்.

இதைதொடர்ந்து, களமிறங்கிய புஜாரா மற்றும் மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான முரளி விஜய்யின் இணைப்பபாட்டம் அணிக்கு சற்று ஆறுதல் அளித்தது. இருவரும் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி இரண்டாவது விக்கெட்டுக்காக 178 ஒட்டங்களை பகிர்ந்தனர். புஜாரா, 83 ஒட்டங்கள் பெற்றிருந்த நிலையில், ஆட்டமிழந்து பெவிலியம் திரும்பினார்.

இதையடுத்து, மூன்றாவது வீரராக களமிறங்கிய அணித்தலைவர் விராட் கோஹ்லி, விஜய்யுடன் சேர்ந்து அணியின் ஒட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்த விஜய், 108 ஒட்டங்கள் பெற்றிருந்த நிலையில், தஜ்சுல் இஸ்லாமின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பின் களம் புகுந்த அஜின்கியா ரஹானே, களத்தில் இருந்த கோஹ்லிக்கு சிறந்த முறையில் ஒத்துழைத்தார். இருவரும் கைகோர்த்து, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஓட்ட எண்ணிக்கையை 356ஆக உயர்த்தினர்.

ஆட்ட நேர முடிவில் ரஹானே 45 ஒட்டங்களுடனும், கோஹ்லி 111 ஒட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். பந்து வீச்சு சார்பில் டஸ்கின் ஹமட், தஜ்சுல் இஸ்லாம், ஹசான் மிராஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg