Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாமல் ராஜபக்ஷவிடம் CID விசாரணை: சகாக்களுக்கு பிடியாணை!

In இலங்கை
Updated: 11:35 GMT, Feb 9, 2017 | Published: 11:34 GMT, Feb 9, 2017 |
0 Comments
1202
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
namal

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவரை இரண்டு மாதங்களுக்கு இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 45 மில்லியன் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு பணச்சலவை சட்டத்தை மீறியுள்ளாரென நாமல் உள்ளிட்ட ஆறு பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களில் இருவர் நாட்டில் இல்லாத நிலையில், அவர்களை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைதுசெய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg