Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எனது அரசாங்கத்தில் அதிக பட்ச நிதி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்டது : சந்திரிகா

In இலங்கை
Updated: 16:15 GMT, Feb 9, 2017 | Published: 16:03 GMT, Feb 9, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Vithushagan
unnamed (10)

மலையக பெருந்தோட்ட பகுதியில் வாழ்கின்ற தொழிலாளர்களுக்கு தனி வீடுகளை அமைப்பதற்காக எனது அரசாங்க காலத்தில் அதிக பட்ச நிதி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்டது. என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற வைபவத்தில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ‘மறைந்த மலையகத்தின் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களின் கீழ் இந்த அமைச்சு இயங்க நான் வித்திட்டேன்.

முதல் முறையாக இந்த அமைச்சு உருவாக்கிய பொழுது மலையக மக்களுக்கு தனி வீடு திட்டத்தை செய்யுங்கள் என நான் வேண்டுக்கோள் விடுத்தேன்.

அதன்படி 20 வருடங்களுக்கு அதிகமான காலப்பகுதி சென்ற போதிலும் இன்று நான் கண்ட கனவு நனவாகியது.

மலையக பெருந்தோட்ட பகுதியில் வாழ்கின்ற தொழிலாளர்களுக்கு தனி வீடுகளை அமைப்பதற்காக எனது அரசாங்க காலத்தில் அதிக பட்ச நிதி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்டது.

ஆனால் தனி வீடுகளை அமைப்பதற்காக காணிகள் பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாக அன்றைய அமைச்சர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

ஆகையால் பெருந்தோட்ட நிர்வாகங்களை நிர்வகிக்கும் நிறுவனத்திடம் கலந்துரையாடி காணிகளும், பெற்றுக்கொள்ள வழிவகுக்கப்பட்டது. ஆனால் வீடுகள் கட்டவில்லை.

இன்று இந்த அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஊடாக தனி வீடுகள் அமைக்கும் திட்டம் நிறைவேற்றம் அடைந்து வருகின்றது.

இலங்கை நாடு பல்வேறு இன மக்களை கொண்ட நாடாகும். இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்த வேண்டும்.

வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் இந்நாட்டில் அனைத்து மக்களும் இலங்கையர்களே ஆவோம்.

அனைவரும் அனுபவிக்கும் உரிமைகள் சமமான உரிமைகளாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தியும் முன்னெடுத்தும் வருகின்றோம்’ என அவர் தனது உரையில் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg