Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு எழுக தமிழ்: எழுச்சி உரையாற்றுகிறார் சி.வி. (3ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 12:59 GMT, Feb 10, 2017 | Published: 04:25 GMT, Feb 10, 2017 |
0 Comments
1986
icon_com
This post was written by : Risha

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுரம் அருகிலிருந்து ஆரம்பமாகிய ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி விவேகானந்தா விளையாட்டு மைதானத்தை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அங்கு எழுச்சி உரையாற்றி வருகிறார்.

சி.வி. தலைமையில் பேரணி ஆரம்பம் (2ஆம் இணைப்பு)

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுரம் அருகிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.

குறித்த பேரணியில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம், தமிழ் மக்கள் ரேவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

வடக்கு கிழக்கு இணைப்பு, இராணுவத்தினர் வெளியேற்றம், காணாமல் போனோரை கண்டுபிடித்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு பேரணி இடம்பெற்று வருகின்றது.

பேரணி விவேகானந்தா விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தவுடன், நண்பகல் 12 மணியளவில் எழுக தமிழ் மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

elu elu6 elu2 elu3

 

எழுச்சியுடன் ஆரம்பமாகவுள்ள கிழக்கு எழுக தமிழ் பேரணி

காலம் காலமாக தீர்க்கப்படாதுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணைந்த வடகிழக்கே தீர்வு என்பதையும், சமஷ்டியின் மூலமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பதையும் வலியுறுத்தி கிழக்கு எழுக தமிழ் பேரணி தற்போது எழுச்சியுடன் ஆரம்பமாகவுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுரம் அருகிலிருந்து பேரணி ஆரம்பமாகவுள்ள நிலையில், இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பலர் பேருந்துகளில் வந்தவண்ணமுள்ள நிலையில், குறித்த பேரணியில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்போது மணிக்கூட்டு கோபுரத்தின் அருகிலிருந்து பேரணியாக மக்கள், விவேகானந்தா விளையாட்டு மைதானம் வரை செல்லவுள்ளனர். அங்கு, வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், இணைத்தலைவர் ரி. வசந்தராஜா உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எழுச்சியுரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg