Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் மேன்முறையீட்டு மனுவை நிராகரித்தது அமெரிக்க நீதிமன்றம்

In
Published: 05:54 GMT, Feb 10, 2017 |
0 Comments
1237
icon_com
This post was written by : Elakkiya

பயணத்தடையை செயற்படுத்த வேண்டும் என்ற டொனால்ட் ட்ரம்பின் மேன்முறையீட்டு மனுவை அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று ஓரிரு நாட்களில் ஏழு முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவினுள் நுழைவதற்கு தடை விதித்து குடிவரவு நிர்வாக ஆணை பிறப்பித்தார்.  எனினும் அவருடைய இந்த ஆணைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில் அமெரிக்க கீழ் நீதிமன்றம் ஒன்று ட்ரம்பின் மேற்படி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் கீழ் நீதிமன்றின் தடைக்கு எதிராக மேல் நீதிமன்றில் ட்ரம்ப் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது. குறித்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த மேல்முறையீட்டுக்கான பொது அதிகார வரம்புடைய 9 ஆவது அமெரிக்க நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது.

டிரம்ப் விதித்த தடையை நியாயப்படுத்தும் வகையில் எவ்வித சான்றுகளையும் அரசு நிரூபிக்கவில்லை என்று நீதிமன்ற அமர்வின் 3 நீதிபதிகளும் ஒருமனதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், ட்ரம்பின் நிர்வாக ஆணையை விளக்கும் வகையில் சான்றுகளை வழங்குவதற்கு மாறாக ட்ரம்பின் முடிவை மீளாய்வு செய்ய கூடாது என்ற நிலையிலேயே அரசு செயற்பட்டதாகவும் மேன்முறையீட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆபத்திலுள்ளதாகவும் அதனை சட்டபூர்வமாக எதிர்கொள்ள போவதாகவும் ட்ரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg