Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவின் பதவி தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை ஆளுனர் காத்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம்

In இந்தியா
Updated: 05:47 GMT, Feb 10, 2017 | Published: 05:47 GMT, Feb 10, 2017 |
0 Comments
1298
This post was written by : Shailu

சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று ஆளுனருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரவித்துள்ளார்.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

‘அ.தி.மு.க.வுக்கு தனது சட்டமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்ய எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் அந்த தலைவருக்கு முதலமைச்சர் பதவிக்கான தகுதி உள்ளதா என்று கேட்க தமிழக மக்களுக்கு உரிமை உள்ளது. இதே விடயத்தை ஆளுனரும் கேட்க வேண்டும்.

ஏனென்றால், உச்ச நீதிமன தீர்ப்பு திகதி நெருங்கி வருகிறது. அதுவரை காத்திருக்க வேண்டும். அவர் உடனடியாக சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற அரசியல் சட்ட கட்டுப்பாடு எதுவும் இல்லை.

ஒருவேளை, சசிகலாவுக்கு தகுதியிழப்பு ஏதும் ஏற்படாவிட்டால், அப்போது அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய கடமை, ஆளுர்னருக்கு உள்ளது.’ என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg