Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீண்பழி சுமத்தி நாடாளுமன்றின் நேரத்தை வீணடிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்: கிழக்கு முதல்வர்

In இலங்கை
Updated: 06:35 GMT, Feb 10, 2017 | Published: 06:35 GMT, Feb 10, 2017 |
0 Comments
1160
icon_com
This post was written by : Risha
nazir-720x480

மக்கள் பிரச்சினைகளை எடுத்துரைக்க வேண்டிய நாடாளுமன்றத்தின் பெறுமதியான நேரத்தை, தனிப்பட்ட கோபதாபங்களை தீர்த்துக் கொள்ள பயன்படுத்துவது தமக்கு வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி கிழக்கு முதலமைச்சரால் தடுக்கப்பட்டதாக பிரதியமைச்சர் அமீர் அலி நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த கிழக்கு முதலமைச்சர், ‘எமது பகுதிகளின் அபிவிருத்திகளை தடுக்க வேண்டிய தேவை எமக்கில்லை. வறுமையிலும், வேலையில்லா திண்டாட்டத்தினாலும் பல இன்னல்களை எதிர்கொண்டுவரும் கிழக்கு மக்கள் சகல அபிவிருத்திகளையும் பெற்று ஏனைய மாகாண மக்களைப் போன்று நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே எனது ஒரே இலக்கு.

எனவே வீண்பழி சுமத்துவதை நிறுத்தி, கிழக்கிற்கான அபிவிருத்திகளைப் பெற்றுக் கொடுக்க எமது மாகாண அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டுமென பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்.

அதுமட்டுமின்றி மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்க வேண்டிய நாடாளுமன்றத்தில் பெறுமதியான நேரத்தை தனிப்பட்ட கோபதாபங்களை தீர்த்துக் கொள்ள பயன்படுத்துவது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

அவர் கூறுவது போன்று ஏறாவூர் வைத்தியசாலை அபிவிருத்திகள் எம்மால் தடுக்கப்படவில்லை. ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேற்று பிரிவு ஆகியவற்றை நாம் அபிவிருத்தி செய்துள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் வளம் குறைந்த ஆதார வைத்தியசாலையான ஏறாவூர் வைத்தியசாலையை வளம்மிக்க ஆதார வைத்தியசாலையாக மாற்ற அதற்கான சிசிரிவி கமராக்கள் மற்றும் நோயாளர்களை ஏற்றி இறக்க உதவியான மின் தூக்கி ஆகியவற்றையும் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

அத்துடன் இவ்வாண்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களின் உதவியுடன் 117 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளோம்’ என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg