Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேஷியாவில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

In
Updated: 06:28 GMT, Feb 10, 2017 | Published: 06:26 GMT, Feb 10, 2017 |
0 Comments
1228
icon_com
This post was written by : Elakkiya
_94250611_landslide2

இந்தோனேஷியாவின் பிரபலமான சுற்றுலா தீவான பாலியில் நேற்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவானது கின்டமனி பகுதியின் பல கிராமங்களை வெகுவாக பாதித்துள்ளது.

குறித்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவந்த மழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக தேசிய பேரழிவு நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு வயதுடைய சிறுதி ஒருத்தியும் ஒரு வயதுடைய ஆண் குழந்தை ஒன்றும் அவர்களுடைய தாயும்  உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் செஞ்சிலுவைச் சங்க தொண்டு நிறுவன ஊழியர்கள்இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகளாவிய ரீதியில் காடழிப்பு நடவடிக்கையில் இந்தோனேஷிய வேகமாக ஈடுபட்டுவருகின்ற நிலையில் இத்தகைய காடழிப்பு மற்றும் நகர்புற திட்டமிடல்கள் காரணமாகவே பேரழிவுகள் ஏற்படுவதாக சுழலியலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

_94250613_landslide3
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg